மக்கள் கணக்கு
"மக்கள் பணத்திற்கு மக்கள் கணக்கு" என்று பிறரிடம் கேட்கும் நாங்கள், எங்கள் கணக்கை முதலில் காட்டுகிறோம்.
எங்கள் பண விதிகள்
அமைப்புச் சட்டம் பிரிவு 12. இவற்றை மாற்றப் பொதுக்குழுவின் மூன்றில் இரண்டு பங்கு வாக்கு வேண்டும்.
ஒருவரிடம் ஓராண்டில், கட்சி முழுவதும் சேர்த்து, ₹2,000 வரை மட்டுமே ரொக்கம். அதற்கு மேல் காசோலை, வரைவோலை, வங்கிப் பரிமாற்றம், UPI மூலம் மட்டுமே.
பெற்ற நாளிலேயே நன்கொடைப் பதிவேட்டில் பதிவு; வரிசை எண்ணுடன் ரசீது. ஓராண்டில் ₹20,000-க்கு மேல் கொடுப்பவரின் PAN பதிவு.
பெற்ற ரொக்கம் மூன்று வேலை நாட்களுக்குள் கட்சி வங்கிக் கணக்கில். அதற்கு முன் அதிலிருந்து எந்தச் செலவும் இல்லை.
கட்சி வங்கிக் கணக்கைப் பொருளாளரும், தலைவர் அல்லது பொதுச் செயலாளரும் சேர்ந்தே இயக்க முடியும். யாரும் தனக்குத் தானே பணம் அனுமதிக்க முடியாது.
CAG பட்டியலில் உள்ள பட்டயக் கணக்காளர் ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை செய்வார். தணிக்கை அறிக்கை ஆறு மாதத்துக்குள் தேர்தல் ஆணையத்துக்கு.
சட்டம் தடுக்கும் எந்தப் பணமும், வெளிநாட்டுப் பங்களிப்பும் பெறப்படாது.
எந்த நன்கொடையும் பதவியையோ, வேட்பாளர் வாய்ப்பையோ, ஒப்பந்தத்தையோ, கொள்கை முடிவையோ வாங்கித் தராது. அப்படிக் கேட்பது ஒழுங்கீனம்.
ஆண்டு வரவு செலவுச் சுருக்கம் எல்லா உறுப்பினர்களுக்கும். தணிக்கை செய்த கணக்கை எந்த உறுப்பினரும் கேட்டுப் பார்க்கலாம்.
ஆண்டு வாரியான கணக்கு
| நிதியாண்டு | வரவு | செலவு | தணிக்கை அறிக்கை |
|---|---|---|---|
| 2026–27 (முதல் ஆண்டு) | ஆண்டு முடிவில் | ஆண்டு முடிவில் | செப்டம்பர் 2027-க்குள் |
நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை. வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கு வேட்பாளர் விவரங்கள் பக்கத்தில்.