நல்லாட்சிக் கட்சி

மக்கள் பணத்திற்குமக்கள் கணக்கு.

அம்பாசமுத்திரம் தொகுதியில் தொடங்கிய புதிய அரசியல் கட்சி. அரசின் ஒவ்வொரு ரூபாயும் எங்கே போகிறது என்று கேட்கும் உரிமையை மக்களிடம் திருப்பித் தருவதே எங்கள் வேலை.

மாலை நேரத்தில் தெருவில் நாற்காலிகளில் அமர்ந்து ஊர் மக்களுடன் பேசும் நெல்லை ஜான் முத்து
தெருவிலேயே அமர்ந்து, மக்களின் பிரச்சினைகளைக் கேட்டல். மனு அங்கேயே எழுதப்படுகிறது.
18 அக்டோபர் 2026நிறுவனக் கூட்டத்தில் கட்சி தொடங்கப்பட்டது
தேர்தல் ஆணையப் பதிவுவிண்ணப்பம் தயாரிப்பில்; இன்னும் பதிவு பெறவில்லை · 20 அக்டோபர் 2026 நிலவரம்
உறுப்பினர் கட்டணம் இல்லை18 வயது நிரம்பிய எந்த இந்தியக் குடிமகனும் சேரலாம்
ஆவணத்துடன்

வாக்குறுதி அல்ல; ரசீது எண்.

கட்சி தொடங்கும் முன்பே, 24–26 செப்டம்பர் 2026 ஆகிய மூன்று நாட்களில், தெற்கு வீரவநல்லூர், புதுக்குடி, காரைக்குறிச்சி, வடக்கு காருகுறிச்சி மக்களுக்காக 34 மனுக்கள் முதல்வரின் முகவரி (CM Helpline) வழியாகப் பதிவானது. ஒவ்வொன்றுக்கும் ஒரு மனு எண்; ஒவ்வொன்றின் நிலையும் அரசு தளத்தில் உள்ளபடியே.

  • வீடு, வீட்டுமனைப் பட்டா12
  • சமூகச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ்12
  • ஓய்வூதியம், மாற்றுத்திறனாளர் உதவி6
  • சாலை, வடிகால், நியாயவிலைக் கடை4
  • மொத்தம் · நிலை: பெறப்பட்டது34

உதவி பெற்றவர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் அல்ல; உதவிக்கு எந்த நிபந்தனையும் இல்லை (அமைப்புச் சட்டம் 4(4)). பெயர், கைபேசி எண், ஆதார் எண் எதுவும் வெளியிடப்படுவதில்லை.

வடக்கு காருகுறிச்சி ராஜீவ் காலனியில் வீட்டு முன் நின்று கூட்டுக் கோரிக்கை தரும் பெண்களும் நெல்லை ஜான் முத்துவும்
வடக்கு காருகுறிச்சி, ராஜீவ் காலனி: பொதுமக்களின் கூட்டுக் கோரிக்கை. இந்தக் காலனியிலிருந்து 25 செப்டம்பர் 2026 அன்று பகுதிநேர நியாயவிலைக் கடை கேட்டு முதல்வரின் முகவரி மனு (எண் 19174676) பதிவானது.
சேரன்மகாதேவியில் குடிநீர் கேட்டு மனுக்களுடன் சாலையில் அமர்ந்திருக்கும் மக்கள்; நடுவில் நெல்லை ஜான் முத்து. நியூஸ் தமிழ் 24x7 நேரலைக் காட்சி
சேரன்மகாதேவி: குடிநீர் கேட்டு மக்களுடன் அமர்ந்த போராட்டம். "லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி" என்று நியூஸ் தமிழ் 24x7 நேரலையில் ஒளிபரப்பியது.

மக்களுக்காக உழைப்பவர்கள்

18 அக்டோபர் 2026 நிறுவனக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பேர். பதவிக் காலம் மூன்று ஆண்டுகள். எந்தப் பதவியும் நிரந்தரம் அல்ல; யாருக்கும் தடை உரிமை இல்லை; அடுத்த தேர்தலில் எந்த உறுப்பினரும் போட்டியிடலாம்.

நெல்லை ஜான் முத்து

Nellai John Muthu தலைவர்

பத்து ஆண்டுகள் நெதர்லாந்து, இத்தாலியில் வாழ்ந்து திரும்பியவர். மேலப்புதுக்குடியில் இலவச மக்கள் சேவை மையம் நடத்துகிறார்.

ஜெனிஃபர் முத்துக்குமார்

Jenifer Muthukumar துணைத் தலைவர்

இளம் தாய்; குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகுபவர். பெண்களின் முன்னேற்றம் அவரின் கவனம்.

வி. கிங்ஸ்லி

V. Kingsley பொதுச் செயலாளர்

பி.ஏ., பி.எல். TNPSC குரூப் 1, 2 தேர்வுகளுக்குப் பாடம் நடத்துபவர். கட்சியின் பதிவேடுகளுக்கும் தேர்தல் ஆணையக் கடிதங்களுக்கும் பொறுப்பு.

கண்ணப் பெருமாள்

Kanna Perumal துணைப் பொதுச் செயலாளர்

பண்ணை நடத்துபவர்; ஊரில் மதிக்கப்படுபவர், மக்களுக்கு உதவுவதில் முன்நிற்பவர்.

சுதா பி

Sudha P பொருளாளர்

பட்டதாரி. கட்சியின் கணக்குகளுக்கு முழு நேரம் தர முன்வந்தவர். கட்சியிடம் ஊதியம் பெற முடியாத பொறுப்பு (பிரிவு 8(21)).

சசி குமார்

Sasi Kumar துணைப் பொருளாளர்

விவசாயி; தன் ஊர் மக்களுக்குத் துணை நிற்பவர். கட்சியிடம் ஊதியம் பெற முடியாத பொறுப்பு (பிரிவு 8(21)).

அடுத்தவர் நீங்களாக இருக்கலாம்

மாநில நிர்வாகக் குழுவின் 11 இடங்களும் மூன்று சுயாதீனக் குழுக்களும் 16 ஜனவரி 2027-க்குள் கூடும் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்படும். 65 மக்கள் பணிப் பொறுப்புகள் இப்போதே திறந்துள்ளன.

எப்படி என்று பாருங்கள்

நாங்கள் யார்

நல்லாட்சிக் கட்சி திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதியில் தொடங்கிய புதிய அரசியல் கட்சி. வெளிநாடுகளில் கண்ட வெளிப்படையான ஆட்சி முறையையும், ஊரில் செய்யும் இலவச மக்கள் சேவையையும் இணைத்து, சுத்தமான ஆட்சியை நடைமுறையில் கொண்டுவர முயல்கிறோம்.

பொதுப் பணம் எங்கே போகிறது என்று மக்களால் பார்க்க முடிவதில்லை. தொகுதி வளர்ச்சி எல்லா ஊருக்கும் சமமாக இல்லை. மக்களின் பிரச்சினைகள் பதிவே ஆகாமல் போகின்றன. இவற்றுக்குத் தீர்வாக, கணக்குக் காட்டும் அரசியலைக் கட்டுகிறோம்.

மூன்று நோக்கங்கள்

எங்கள் அமைப்புச் சட்டத்தின் மூன்று நோக்கங்கள்: நல்லாட்சி, பசுமை, வளர்ச்சி.

நல்லாட்சி

Good governance

ஊழல் இல்லாத, வெளிப்படையான, மக்களுக்குப் பதில் சொல்லும் நிர்வாகம். மக்கள் பணத்தில் நடக்கும் ஒவ்வொரு வேலைக்கும் பொதுக் கணக்கு.

நல்லாட்சி பற்றி மேலும்

பசுமை

Environment

தாமிரபரணி, குளங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள், விவசாய நிலங்கள். இவற்றைக் காப்பதே நாளைய தலைமுறைக்கான முதலீடு.

பசுமை பற்றி மேலும்

வளர்ச்சி

Inclusive growth

கல்வி, மருத்துவம், வேலை, அரசுத் திட்டங்கள், சாலை, குடிநீர். இடைத்தரகர் இல்லாமல், பாகுபாடு இல்லாமல் ஒவ்வொருவருக்கும்.

வளர்ச்சி பற்றி மேலும்

நாங்கள் எப்படி வேறுபடுகிறோம்

இவை வாக்குறுதிகள் அல்ல; எங்கள் அமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்ட விதிகள்.

மேலிருந்து நியமனம் இல்லை

கட்சியின் ஒவ்வொரு பதவியும் உறுப்பினர்களின் தேர்தல் மூலமே. தலைவருக்கு யாரையும் நியமிக்கும் அதிகாரம் கிடையாது.

வேட்பாளர் தேர்வில் உறுப்பினர் வாக்கு

ஒவ்வொரு வேட்பாளரும் அந்தத் தொகுதி உறுப்பினர்களின் இரகசிய வாக்கெடுப்பு வழியே வருகிறார். உறுப்பினர் குறைவான பகுதிகளில், அந்த வாக்கை வழிகாட்டியாகக் கொண்டு சுதந்திரமான மதிப்பீட்டுக் குழு முடிவு செய்யும். தலைமை நியமனம் இல்லை.

பணத்துக்கு மதிப்பெண் இல்லை

செல்வம், சாதி, நன்கொடை, குடும்பப் பின்னணி, பிரபலம்: எதுவும் வேட்பாளர் தகுதி அல்ல. களப்பணியே தகுதி.

ஒவ்வொரு ரூபாய்க்கும் ரசீது

ஒருவரிடம் ஆண்டுக்கு ₹2,000 வரை மட்டுமே ரொக்கம். வங்கிக் கணக்கை இருவர் சேர்ந்தே இயக்க முடியும். ஆண்டுதோறும் தணிக்கை.

குற்றப் பின்னணி உள்ளவர்களுக்குப் பதவி இல்லை

கடுங்குற்ற வழக்கில் தண்டனை அல்லது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுப் பதிவு இருந்தால் கட்சிப் பதவி இல்லை.

உதவிக்கு நிபந்தனை இல்லை

மனு எழுதவோ அரசுத் திட்டம் பெறவோ நாங்கள் செய்யும் உதவிக்கு, கட்சியில் சேர வேண்டும் என்றோ வாக்களிக்க வேண்டும் என்றோ நிபந்தனை இல்லை.

பதிவுக்கான பாதை

ஒரு கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற சட்டம் வகுத்த வழி இது. ஒவ்வொரு அடியையும் இங்கே வெளிப்படையாகப் பதிவு செய்கிறோம்.

20 அக்டோபர் 2026 நிலவரம். ஆவணங்கள் தயாரானதும் ஆவணங்கள் பக்கத்தில்.

  1. நிறுவனக் கூட்டம்18 அக்டோபர் 2026: கட்சி தொடக்கம், அமைப்புச் சட்டம் ஏற்பு, ஆறு நிர்வாகிகள் தேர்வு
  2. உறுப்பினர் உறுதிமொழிப் பத்திரங்கள்நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், நோட்டரி முன் நேரில்
  3. தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்கட்சி தொடங்கிய 30 நாட்களுக்குள், பிரிவு 29A
  4. செய்தித்தாள் அறிவிப்புஆணையம் சொல்லும் வடிவில்; 30 நாள் ஆட்சேபனைக் காலம்
  5. பதிவுதேர்தல் ஆணையத்தின் முடிவு